கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் துறையின் உடன் பிறப்பு இன்பர்மேஷன் டெக்னாலஜி. கம்ப்யூட்டர் தகவல் தொடர்பான நுட்பங்களும் பயன்பாட்டுக்கு ஏற்ப அந்தத்தொழில்நுட்பங்களைக் கையாளுவது குறித்த படிப்புதான் இன்பர்மேஷன் டெக்னாலஜி. பொறியியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்களின் முக்கிய விருப்பப் படிப்புகளில் இதுவும் ஒன்று. தகவல் தொழில்நுட்பத் துறையில் இன்பர்மேஷன் டெக்னாலஜி படித்த திறமையான மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகள் ஏராளம்.
நான்கு ஆண்டுப் படிப்பு இது. இதே துறையில் முதுநிலைப் படிப்புகளைப் படிக்க வாய்ப்புகள் உள்ளன.