நாளிதழ், தொலைக்காட்சி, செய்தி நிறுவனங்களில் பணியாற்ற விரும்புவோர் தேர்வு செய்யும் இளநிலை படடப்படிப்பாக இருப்பது பி.ஏ. ஜேர்னலிசம் அன்ட் மாஸ் கம்யூனிகேஷன்.
இந்த 3 ஆண்டுகளைக் கொண்ட இளநிலைப் படிப்பில் சேர பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 6 செமஸ்டர்களைக் கொண்டதாக இப்படிப்பு அமையும்.
சிக்கிமில் உள்ள மணிப்பால் பல்கலைக்கழகம் இப்படிப்பை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாகும். மத்திய அரசின் அங்கீகாரத்துடன் இப்படிப்பு வழங்கப்படுகிறது.
செய்தி சேகரிப்பு, செய்தி அமைத்தல், தொலைத்தொடர்பு சாதனங்களை கையாளுதல் போன்ற விஷயங்களை இப்படிப்பில் மாணவர்கள் கற்றுக் கொள்வார்கள். செய்தி அளிக்கும் நிறுவனங்கள் ஏராளமாக வளர்ந்து விட்டதால் இப்படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு உடனடியாக வேலை வாய்ப்புகள் உள்ளன.