உலோகத்தாதுக்களிலிருந்து உலோகங்களைப் பிரித்தெடுத்தல், செம்மைப்படுத்துதல், உலோகங்களைக் கலந்து உலோகக் கலவைகளை உருவாக்குதல், வடித்தெடுத்தல் உள்பட உலோகவியல் பொறியியல் தொடர்பான பல்வேறு தொழில்நுட்பங்கள் இப்படிப்பில் கற்றுத்தரப்படும்.
அரசுப் பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் தொழிற்சாலைகள், ஆய்வுக் கூடங்கள் ஆகியவற்றில் இப்படிப்பு முடித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும்.
நான்கு ஆண்டுப் படிப்பு இது. இதே துறையில் முதுநிலைப் படிப்புகளைப் படிக்க வாய்ப்புகள் உள்ளன.