இன்றைய இன்ஜினியரிங் படிப்புகளில், முக்கியத்துவம் வாய்ந்ததாக மெட்டீரியல் சயின்ஸ் உள்ளது. பல்வேறு பொருட்களின் தன்மை, இயற்பியல் குணங்கள், அறிவியல் மற்றும் இன்ஜினியரிங் துறையில் அவற்றின் பயன்பாடு குறித்து விளக்கும் துறை மெட்டீரியல் சயின்ஸ்.
அப்ளைடு பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி, கெமிக்கல் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், சிவில் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பற்றிய பாடங்கள் இதில் இடம்பெறுகின்றன. மூலப்பொருட்கள் குறித்தும், அவற்றின் பயன்பாடு குறித்தும் புரிந்து கொள்ள மெட்டீரியல் சயின்சில் அடிப்படை அறிவியலையும், இன்ஜினியரிங்கையும் பயன் படுத்துகின்றனர். பயன்பாட்டுக்கு ஏற்றவாறு, மூலப்பொருட்களை வடிவமைப்பது பற்றி ஆராயவும், மாணவர்களுக்கு கற்றுத் தரப்படுகிறது.
அறிவியல் மற்றும் இன்ஜினியரிங் திறன் இந்த துறைக்கு அவசியம். இயற்பியல், வேதியியல், கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ் தொடர்பான அறிவியல் திறன்கள் மூலப்பொருட்களின் தன்மை அறிந்து கொள்ள உதவுகிறது. செராமிக், மெட்டலர்ஜி, எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், கெமிக்கல் தொடர்பான இன்ஜினியரிங் திறன்கள், மூலப்பொருட்களை தேவைக்கு ஏற்பட வடிவமைக்க உதவுகிறது. மெட்டீரியல் சயின்ஸ் துறையில் பல்வேறு பிரிவுகளில் ஆய்வுகள் நடக்கின்றன.
பயோஆக்டிவ் செராமிக்ஸ், பயோமெடிக்கல் இன்ஜினியரிங், பயோமெட்டீரியல்ஸ், செராமிக்ஸ் அண்டு கிளாஸ் புராசசிங், காம்போசைட், எலக்ட்ரானிக் மெட்டீரியல், என்விரான்மென்ட் ஸ்டபிலிட்டி ஆப் மெட்டீரியல், மெஷினிங் அண்டு மேனுபக்சரிங், மெட்டீரியல்ஸ் கெமிஸ்ட்ரி, மெக்கானிக்கல் பிஹேவியர் ஆப் மெட்டீரியல்ஸ், மெட்டல்ஸ் அண்டு அலாய்ஸ், மைனிங் அண்டு மினரல்ஸ், ஆப்டிக்கல் பிராபர்டி ஆப் மெட்டீரியல்ஸ், ஆப்டோ எலக்ட்ரானிக்ஸ், பொனிட்டிக் மெட்டீரியல்ஸ், பாலிமர், சாலிடிபிகேஷன், புராசசிங், சர்பேசஸ், தின் பிலிம்ஸ் போன்றவை.
சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு இன்ஜியரிங் கல்லூரிகளில் பி.இ., படிப்பாக மெட்டீரியல் சயின்ஸ் அண்டு இன்ஜியரிங் படிப்பு வழங்கப்படுகிறது.