பி.ஏ. மாஸ் மீடியா படிப்பினை பிளஸ் 2 படித்து முடித்தவர்கள் சேரலாம். மீடியா துறையில் அதிக ஆர்வம் கொண்டவர்கள், இந்த படிப்பினை தேர்வு செய்வது நல்லது. இந்தியாவில் ஒரு சில குறிப்பிட்ட கல்வி நிறுவனங்களே மாஸ் மீடியா பாடப்பிரிவை வழங்குகிறது. வெளிநாடுகளில் இது தற்போது பிரபலமான பாடப்பிரிவாகும்.
3 ஆண்டுகள் கொண்ட இந்த பாடப்பிரிவில், செய்தி சேகரிப்பு, ஒளிப்பதிவு, எடிட்டிங் போன்ற பிரிவுகள் அமைந்திருக்கும்.
கல்வி நிறுவனம்
கோவா மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள மாஸ் மீடியா கம்யூனிகேஷன் கல்லூரிகள் மட்டுமே தற்போது இந்த பட்டப்படிப்பை அளிக்கின்றன.