பிளஸ் 2 முடித்தவர்கள் இப்படிப்பில் சேரலாம். மூன்றாண்டு கால இளநிலை பட்டப்படிப்பாக இப்படிப்பு வழங்கப்படும். இந்தியாவில் உள்ள ஒரு சில கல்லூரிகளே இப்படிப்பை வழங்குகின்றன.
இந்தியாவில் இஸ்லாமிய மதம் துவங்கியது, அதன் கொள்கைகள், மனிதர்களுக்கு இஸ்லாமிய மதம் காட்டும் வழி, அவற்றை பின்பற்றும் முறை, இஸ்லாமிய மக்களுக்காக அல்லா கூறும் கருத்துக்கள், கடமைகள் போன்ற அனைத்தும் இப்படிப்பில் வழங்கப்படுகிறது.
இஸ்லாமிய மதம் சார்ந்த பள்ளிகளில் ஆசிரியராகவோ, முதுகலை படித்து பேராசிரியராகவோ பணியாற்றலாம். இஸ்லாமிய மதத்தை பின்பற்றும் பல வெளிநாடுகளில் இப்படிப்பை முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு உள்ளது.