இரு வேறு துறைகளைச் சேர்ந்த பாடங்களின் தொகுப்புதான் இந்தப் பாடம். அவை: தகவல் தொழல்நுட்பம் மற்றும் மேலாண்மை. இன்பர்மேஷன் சிஸ்டம் டிசைன், ஆப்பரேஷன்ஸ், நிர்வாகம் போன்ற பாடங்கள் இதில் பயிற்றுவிக்கப் படுகின்றன. மேலாண்மை தொடர்பாக, பிசினஸ், பொருளாதாரம், மேலாண்மை அறிவியல், பிசினஸ் இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ், டேட்டா அமைப்பியல், க்ரிப்டாலஜி, ஆப்பரேஷன்ஸ் ரிசர்ச், கம்யூனிகேஷன் நெட்வொர்க்ஸ், வர்த்தக அறிவியல் போன்ற பாடங்கள் கற்றுத் தரப்படுகின்றன.