உணவு தயாரிப்பதில் உள்ள நுட்பங்கள், இந்த டிப்ளமோ படிப்பின் மூலம் கற்றுத்தரப்படுகிறது. சூடான உணவு தயாரித்தல், குளிர்ச்சியான உணவு தயாரித்தல், உணவை பதனிடுதல், சுத்தப்படுத்துதல், சேமித்தல், கையாளுதல், பரிமாறுதல் போன்ற பணிகளை கற்றுத் தருகின்றனர். உணவு உற்பத்தியில் டிப்ளமோ படித்தவர்கள் திறமையை பொறுத்து, பெரிய ஹோட்டல்களிலும், நிறுவனங்களிலும் தலைமை சமையல் நிபுணராக பணியாற்ற வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன.