கண்ணில் ஏற்படும் பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவத்துடன் தொடர்புடையதே ஆப்தமாலஜி. கண்பார்வையை பரிசோதனை செய்வது மற்றும் கண்ணாடி மற்றும் லென்ஸ் பரிந்துரை செய்வது மட்டும் ஆப்தமாலஜிஸ்ட்டுகளின் பணியல்ல. கண்புறை, குளூகோமா, கண்ணீர் சுரப்பிகளில் ஏற்படும் குறைபாடுகள் போன்றவற்றிற்கு சர்ஜரி மூலம் சிகிச்சை அளிப்பதும் இவர்களின் முக்கியப் பணி. இந்த துறையில் டிப்ளமோ படிப்பதன் மூலம், ஆப்தமாலஜிஸ்ட்டுகள் மருத்துவமனை சார்ந்த பயிற்சியுடன் கண் குறைபாடுகளுக்கு சிகிச்சையளிப்பது பற்றி நன்கு தெரிந்து கொள்ள முடியும். கண் நோயாளிகளுக்கு தடுப்பு நடவடிக்கைகளை உணர்த்துதல், கண் பாதுகாப்பு குறித்து விளக்குதல் போன்றவையும் இவர்களுடைய முக்கியப் பணிகளாகும்.