ஆப்ஸ்டெட்ரிக்ஸ் என்பது பெண்களின் பிரசவ காலத்திலும், குழந்தை பிறப்புக்கு பின் ஆறு மாத காலங்களில் பிறப்புறுப்பு குணமடைந்து வரும் நிலையில் மேற்கொள்ளப்படும் மருத்துவ சிகிச்சையாகும். கைனகாலஜி என்பது பெண்களுக்கு ஏற்படும் பிறப்புறுப்பு தொடர்பான நோய் குணமடைய அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சையாகும். இந்த துறையில் உதவி புரிவதற்கான பயிற்சியை இந்த டிப்ளமோ படிப்பு வழங்குகிறது.