கேட்கும் திறன், பேசும் திறனில் ஏற்படும் குறைபாடுகளை அகற்ற இந்த பாடத்திட்டம் பயிற்சி அளிக்கிறது. இவர்கள், இந்த துறையில் இளம்கலை பட்டம், முதுகலைபட்டம் பெற்ற நிபுணர்களுக்கு உதவியாளர்களாக பணி புரிவார்கள். காது கேட்காதவர்களுக்கு பயிற்சி அளிக்கும் பணியிலும் , தகவல் பரிமாறிக் கொள்வதில் குறைபாடு உடையவர்களை அடையாளம் கண்டு, அவர்களுடைய குறையை ஆராய்ந்து, உதவிபுரியும் பணியிலும் இவர்கள் ஈடுபடுவார்கள்.