படம்பிடிக்கப்பட்ட காட்சிகளை தொகுத்து வழங்குவது, திரைப்படத்தின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பாடத்திட்டம் திரைப்பட தொகுப்பில் சிறப்பான பயிற்சியை வழங்குகிறது. திரைக்கதை அமைத்தல், படம்பிடித்தல், தொகுத்தல் முதலிய பிரிவுகளில் டி.வி., நிகழ்ச்சி தயாரிப்பு படிப்பு பயிற்சி அளிக்கிறது. இந்த படிப்பு முடித்தவர்கள் உதவி இயக்குனராக பணியாற்ற, வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கிறது.