அறிவியல் வளர்ச்சியால் மக்களின் தேவைக்கேற்ப நாள்தோறும் புதிய புதிய கண்டுபிடிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக மருத்துவத் துறையின் கண்டுபிடிப்புகள், மக்களுடைய வாழ்வில் முக்கியப் பங்கினை வகிக்கின்றன. உயிரியலில் மைக்ரோ ஆர்கனிசம் மருத்துவத்துறையில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக உருவாகியுள்ளது. மனிதர்களின் காயம் சார்ந்த நோய்களை குணப்படுத்துவதில் மைக்ரோ ஆர்கனிசம் மிகவும் பயன்பட்டு வருகிறது. இந்த துறை குறித்த அறிமுகத்தை இந்த டிப்ளமோ படிப்பு தருகிறது.