இன்றைய நவீன உலகில் ஆயத்த ஆடைகளின் தேவை அதிகரித்துள்ளது.ஆடை தயாரிப்பு தொழில்நுட்ப படிப்பு, ஆடை தயாரிப்பு நிறுவனங்களில் பணிபுரிய உதவுகிறது. ஆடைகளுக்கு தேவையான துணி ரகங்களை தேர்ந்தெடுப்பது, வடிவமைப்பது, தயாரிப்பு செலவு பட்ஜெட்டை தாண்டாமல் பார்த்துக்கொள்வது, ஆடை வகைகளின் ஆர்டர்கள் பெறுவது, திருப்பி அனுப்பபட்ட சரக்குகளை ஆராய்ந்து குறைகளை கண்டுபிடிப்பது, தயாரிப்பு முறைகள் கடைபிடிக்கபடுகின்றனவா என்று கவனிப்பது, துணி ரகங்களை தேர்வு செய்ய ஆலோசனை வழங்குவது, முதலிய பிரிவுகளில் பயிற்சி வழங்கப்படுகிறது்.