தற்காலத்தில் உலகமயமாக்கலானது சுற்றுலாத்துறையை தொழில்ரீதியான முறையில் லாபம் தரக்கூடிய வகையில் மாற்றியுள்ளது. ஹோட்டல், ரெஸ்டாரண்டுகள் மற்றும் மருத்துவ வசதிகளுடன் கூடிய தங்குமிடங்களின் ஆச்சரியப்படத்தக்க வளர்ச்சி மாணவர்களுக்கு, உலக அளவில் இந்த கல்வி மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.மாணவர்களுக்கு நவீன விடுதி நிர்வாகம் பற்றிய பல்வேறு வகையான கருத்துக்களையும், அதனை செயல் ரீதியாக புரிந்து கொள்ளவும் உதவுகிறது.விடுதி தொழிலில் உள்ள சூழ்நிலையை நன்கு புரிந்து கொள்ளவும், அவர்களுக்கு உண்மையான வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகளை எதிர்கொள்ளவும் கற்றுத்தருகிறது. இதில் கேட்டரிங், மருத்துவபிரிவு, மார்கெட்டிங், அக்கவுண்டிங், நிதித்துறை, ஸ்ட்ரடெஜி, தகவல் பிரிவு மற்றம் பல்வேறு தனித்தனி பிரிவுகளில் திறமையை வளர்த்துக்கொள்ளவும் வாய்ப்புகள் உள்ளது.