பெரிய ஹோட்டல்களிலும், அலுவலகங்களிலும் பிரன்ட் ஆபீஸ் நிர்வாகிகளின் வேலை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. வாடிக்கையாளர் திருப்தி மற்றும் சேவையின் தரம் ஆகியவை இவர்களின் பணியைப் பொறுத்தே அமையும். போட்டியும், சவால்களும் நிறைந்த இந்த துறையில், சிறந்த பிரன்ட் ஆபீஸ் நிர்வாகியாக உருவாவதற்கு தேவையான பயிற்சி டிப்ளமோ கல்வியின் மூலம் வழங்கப்படுகிறது. இந்தப் பணியில் ஈடுபட விரும்புவோருக்கு தேவையான தகவல் தொடர்பு, மக்கள் தொடர்பு, பிரன்ட் ஆபீஸ் நடைமுறைகள், பதிவுப்பணிகள், நிறுவனத்தின் சேவை விபரங்கள், கணக்கு வழக்குகள் போன்றவை பாடத்திட்டத்தில் அடங்கியுள்ளன.