நேனோ தொழில் நுட்பம் தற்போது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மூலக்கூறியல் சார்ந்த இந்த தொழில் நுட்பம் உலகையே மாற்றியமைக்கக் கூடிய பலம் வாய்ந்தது என்கின்றனர். வேதியியல், இயற்பியல், பொறியியல், உயிரியல், உயிர் மருத்துவவியல் போன்ற துறைகளுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை நேனோ தொழில் நுட்பம் செய்து வருகிறது.
இந்த துறையில் உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் மட்டுமின்றி அரசுகளும் அதிக கவனம் செலுத்தி வருவதால் பெரும் வளர்ச்சி பெற்று வருகிறது. இதனால் இந்த துறையில் மாணவர்களின் கவனம் திரும்பியுள்ளது. இந்த டிப்ளமோ படிப்பின் மூலம் நேனோ தொழில் நுட்பத்தின் அடிப்படைகளை கற்றுக் கொள்ள முடிகிறது. அத்துடன் நிறுவனங்களுக்கு தேவையான தொழில் முறை நிபுணர்களை உருவாக்குவதற்கு தேவையான பயிற்சியும் டிப்ளமோ மூலம் அளிக்கப்படுகிறது.