கடந்த 20 ஆண்டுகளில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மற்றும் நவீன இயந்திரங்களின் வளர்ச்சி காரணமாகவும் பின்னலாடை தொழில் அபரிதமான வளர்ச்சி கண்டுள்ளது. இந்த தொழிலில் ஈடுபடவும், சுய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக்கொள்ளவும் இந்த டிப்ளமோ படிப்பு உதவுகிறது. மேலும் தைத்தல், பின்னுதல், எம்பிராய்டரி, நூல் உற்பத்தி, நெசவு, இயந்திரங்கள் மூலம் இயக்குதல், கணினி மூலம் இயக்குதல், அளவீடுகள், குறியீடுகள், தர நிர்ணயம் செய்தல் மற்றும் வடிவமைத்தல் போன்ற பிரிவுகளில் அடிப்படைகளை கற்றுத்தருகிறது.