புனிதமானதாக கருதப்படும் பணி நர்சிங். இப்படிப்பு முடித்தவர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் உள்ளன. நவீன மருத்துவ துறையில் நர்சிங் பணியில் இருப்பவர்கள், நோயாளிகளை குணப்படுத்துவதிலும், குறைபாடுகளை அகற்றுவதிலும் முக்கியப் பங்காற்றி வருகின்றனர். இத்துறையில் பணியாற்ற விரும்புபவர்கள் ஆஸ்பத்திரிகளிலும், மருத்துவக் குழுக்களிலும் இணைந்து செயல்படுவதற்கு இந்த டிப்ளமோ பயிற்சியளிக்கிறது. நம் நாட்டு மக்களின் மருத்துவத் தேவைகளை கவனத்தில் கொண்டு இந்த படிப்பு உருவாக்கப்பட்டுள்ளது.