உடல் நல தகவல்களை சேகரிக்கும் தொழில்நுட்ப நிபுணர்கள் மருத்துவ ஆவணங்களை பராமரிப்பதில் ஈடுபடுவார்கள். இந்த படிப்பு மருத்துவ ஆவணங்களை பராமரிக்கும் முறையை கற்றுத் தருகிறது.தொழில்நுட்ப நிபுணர்கள் மருத்துவ துறையில் உபயோகிக்கும் கலைச்சொற்கள், உடற்கூறியல் முதலிய பிரிவுகளில் அடிப்படை பயிற்சியில் ஈடுபடுவார்கள். மருத்துவ ஆவணங்களில் நோயாளியின் கடந்த கால மருத்துவ தகவல்கள், சிகிச்சை குறிப்புகள், பரிசோதனை குறிப்புகள், அறுவைசிகிச்சை குறிப்புகள் ஆகியவை இடம்பெறும்.