இந்திய ஜனநாயகத்தை பேணிக்காப்பதில் பத்திரிகைகளின் பங்கு மகத்தானது. பத்திரிகை மற்றும் மீடியா துறையில் சாதிக்க விரும்பும் இளைஞர்களுக்காகவே இந்த டிப்ளமோ படிப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மீடியா பணிகள், இத்துறையில் நவீன தொழில் நுட்பங்கள், சமூகப் பொறுப்புகள் போன்ற பல விஷயங்களில் மாணவர்களுக்கு இந்த டிப்ளமோ மூலம் பயிற்சியளிக்கிறார்கள். திறமையும், வேகமும், கற்பனைத்திறனும் பத்திரிகை துறையில் சாதிப்பதற்கு அடிப்படைத் தேவைகள். இவற்றை ஊக்குவிக்கும் விதமான பாடத்திட்டங்களுடன் இந்த டிப்ளமோ அமைந்துள்ளது.