காய்கறிகள், விலங்குகள், கடல்வாழ் உயிரினங்கள் போன்றவற்றிலிருந்து சுவையான உணவுகளை தயாரிப்பதற்கு இந்த டிப்ளமோ படிப்பில் பயிற்சியளிக்கப்படுகிறது. உணவுப் பொருட்களை சுவையாக தயாரிப்பது மட்டுமின்றி, அவற்றை சுகாதாரமான முறையில் ஊட்டச்சத்து மிக்கதாக தயாரிப்பதிலும் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. உணவை பதனப் படுத்துவதில் உள்ள நவீன தொழில் நுட்பங்கள் பற்றியும் மாணவர்களுக்கு பயிற்சியளிக்கப் படுகிறது.