மருத்துவமனை நிர்வாக படிப்பு, மருத்துவமனையில் அமைந்திருக்கும் பல துறைகளை நிர்வாகம் செய்து, அதிக நோயாளிகளுக்கு, குறைந்த செலவில் மருத்துவம் செய்ய கற்றுக்கொடுக்கிறது.மருத்துவமனை நிர்வாகத்தில், தொழில்நுட்ப அறிவில் வளர்ச்சியடைந்து, நிர்வாக திறமையில் முன்னேற்றம் அடைய இந்த பாடத்திட்டம் உதவுகிறது. சமுதாயத்தில் மக்களிடையே உடல்நலத்தை பாதுகாப்பதில் விழிப்புணர்வு அதிகரித்துள்ளதால், இந்த படிப்பு அதிக அளவிலான வேலைவாய்ப்பை பெற்றுத்தரும்.