நிறுவனங்களில் நிர்வாகத்தினை மேற்கொள்ளும் போது ஏற்படும் பிரச்சனைகளை தீர்த்து வைப்பது, சூழ்நிலைக்கு தகுந்து உடனுக்குடன் முக்கிய முடிவுகளை எடுப்பது போன்ற திறமைகளை வளர்த்துக்கொள்ள இந்த கல்வி உதவுகிறது. பிரச்சனைகளை பல பிரிவுகளாக பிரித்து, கணித அடிப்படையில் ஆராய்ந்து தீர்வு காணும் முறையினை அறிய உதவுகிறது. மேலும் வர்த்தகத்தின் போது ஏற்படும் குறைகளையும் களைவதற்கு ஆபரேஷன்ஸ் ரிசர்ச் உதவுகிறது.