பத்திரிகைகள், டி.வி., ரேடியோ, இன்டர்நெட் என்று மீடியாக்கள் பெருகி விட்ட தற்போதைய சூழலில் விளம்பரத் துறைக்கு அதிக முக்கியத்துவம் ஏற்பட்டுள்ளது. ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு விளம்பரம் மிகவும் அத்தியாவசியமானது என்பதால், அவை தரமானவையாக இருக்க வேண்டும் என்பதில் தொழில் நிறுவனங்கள் அதிக கவனம் செலுத்துகின்றன.
தற்போதைய தொழில் மயமான உலகத்தில் மார்க்கெட்டிங் மிக முக்கியப் பங்கை வகிக்கிறது. தொழில் நிறுவனத்திற்கும், வாடிக்கையாளர்களுக்கும் இடையில் மார்க்கெட்டிங் துறை இயங்குகிறது. மார்க்கெட்டிங் இன்றி தொழில் வளர்ச்சி சாத்தியமில்லை. எனவே மார்க்கெட்டிங் துறையில் இருப்பவர்கள் மட்டுமின்றி, நேரடியாக அதில் தொடர்பு இல்லாதவர்களும் மார்க்கெட்டிங் பற்றி அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். மார்க்கெட்டிங் துறையில் விளம்பரங்களின் பயன்களை இப்படிப்பு கற்றுத் தருகிறது.