அனைவருக்கும் சுகாதாரம் என்ற கருத்தின் அடிப்படையில் இந்தியா முழுவதும் சுகாதாரத்தை மேம்படுத்த, மருத்துவமனை நிர்வாக படிப்பு முக்கியமாக கருதப்படுகிறது. மருத்துவமனை நிர்வாக மேலாளர் பணியில் பயிற்சி பெற இந்த படிப்பு உதவும். சுகாதார துறையில் மருத்துவமனைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதிக அளவில் மருத்துவமனைகள் பெருகி வருவதால் மருத்துவமனை நிர்வாகத்தில் கவனத்தை செலுத்த வேண்டியது அவசியமாக இருக்கிறது. இந்த படிப்பு மருத்துவமனை நிர்வாகத்தில் சிறந்த வேலை வாய்ப்பை பெற்றுத்தரும்.