உணவு மற்றும் பானங்கள் தயாரிக்கும் நிறுவனங்களில் வேலை செய்ய விரும்புபவர்களுக்கு இந்த டிப்ளமோ படிப்பு உதவும். இந்த துறையில் தொழில் முறையிலான பலமான அடித்தளத்தை உருவாக்கி சாதிப்பதற்கான கல்வியறிவை இந்த டிப்ளமோ கற்றுத் தருகிறது. பாடத்திட்டம் மற்றும் செய்முறைப் பயிற்சி மூலம், நிறுவனங்களுக்கு தேவையான சிறந்த பணியாளர்களை உருவாக்குவது இந்த டிப்ளமோ கல்வியின் நோக்கமாகும். மூன்று நட்சத்திர ஹோட்டல்கள் முதல் ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள், கிளப்புகள், கப்பல் நிறுவனங்கள் வரை பல்வேறு வேலை வாய்ப்புகள் இத்துறையில் டிப்ளமோ படித்தவர்களுக்காக காத்திருக்கின்றன.