தீவிர சிகிச்சை என்பது நோயாளிகளின் குறைபாடுகளை எவ்வளவு முடியுமோ, அவ்வளவு விரைவாக நிவர்த்தி செய்யும் மருத்துவப் பிரிவு. இது, உயிருக்குப் போராடும் நிலையில் கொண்டு வரப்படும் நோயாளிகளை, தீவிரமாக கண்காணித்து, அவர்களுக்கு தேவையான சிகிச்சையை உடனடியாக அளித்துக் காப்பாற்றும் முக்கியப் பணி. தீவிர சிகிச்சை தேவைப்படும், அபாய கட்டமான நிலையில் உள்ள ஒரு நோயாளிக்கு சிகிச்சை அளித்து, அவரை காப்பாற்றுவதற்கு தேவையான பயிற்சியை மாணவர்களுக்கு இந்த டிப்ளமோ அளிக்கிறது. மருத்துவமனை செய்முறைப் பயிற்சிகளுடன், பாடத்திட்டம் சார்ந்த அறிவும் இந்த டிப்ளமோ மூலம் அளிக்கப்படுகிறது.