உணவுப்பண்டங்கள் மற்றும் பானங்கள் தயாரிக்கும் நிறுவனங்களில் பணிபுரிய விரும்புபவர்களுக்காகவே இந்த டிப்ளமோ உருவாக்கப்பட்டுள்ளது. உணவு மற்றும் பானங்கள் தயாரிப்பில் உள்ள நிர்வாக நடைமுறை, உற்பத்தி, மனிதவள மேலாண்மை, விற்பனை மற்றும் மார்கெட்டிங், சுற்றுலாவியல், சட்டம் மற்றும் நிதி நிர்வாகம் போன்றவை பற்றி கற்றுத்தரப் படுகிறது. பாடத்திட்டம் மற்றும் செய்முறைப் பயிற்சியின் மூலம் மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து, இத்துறையில் சிறப்பாக செயல்பட இந்த டிப்ளமோ பயன்படுகிறது.