வேகமாக வளரும் பொருளாதாரத்திற்கேற்ற படிப்புகளில் ஒன்று பைனான்சியல் டெக்னாலஜி. எண்ணற்ற நிறுவனங்கள் இன்று பன்மடங்கு வளர்ச்சியுடன் பெருகி வருகின்றன. ஒரு புறம் பொறியியல், ஐ.டி., துறைக்கான படிப்புகளை மாணவர்கள் படிக்க ஆரம்பித்துள்ளனர்.
மற்றொரு புறம் பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., என்று படிக்கிறார்கள். வேலை கிடைப்பதற்கு வெறும் பட்டப்படிப்புகள் மட்டும் போதாது.
கட்டாயம், சிறப்புத் திறன்களை பெற வேண்டிய சூழல் நிலவுவதால், பைனான்சியல் டெக்னாலஜி போன்ற படிப்புகளும் முக்கியத்துவம் பெறுகின்றன. இது டிப்ளமோ படிப்பாக தரப்படுகிறது. பைனான்சியல் மேனேஜ்மென்ட் அண்ட் ரிசர்ச் நிறுவனம் மூன்று ஆண்டு டிப்ளமோ படிப்பை இத்துறையில் தருகிறது.
நிதித்துறை தொடர்பான பாடங்களை வடிவமைத்து, மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கிறது. இது சிறப்புப் படிப்பு என்பதால், நல்ல வேலை வாய்ப்புகளை இப்படிப்பு தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதார துறையில் ஆர்வம் இருக்கும் மாணவர்கள், இந்த படிப்புகளில் சேர்ந்து பயன்பெறலாம்.
முழு விபரங்களை அறிய தீதீதீ.டிஞூட்ணூ.ச்ஞி.டிண என்ற இணையதளத்தைப் பார்க்கவும்