பழமையும், நவீனமும் கலந்தது நாடகக்கலை. நாடகத்தில் நடிப்பதற்கு பயிற்சி வேண்டும். அரங்கம் குறித்த அறிவு, தேர்ந்த வசன உச்சரிப்பு போன்றவை இருந்தால் தான் இத்துறையில் பிரகாசிக்க முடியும். நாடகத்துறையின் தொழில்நுட்பங்களை இந்த டிப்ளமோ மூலம் கற்றுத் தருகிறார்கள். நடிப்பு மட்டுமின்றி, நாடகம் எழுதுவது, இயக்குவது, ஒப்பனை, அரங்க வடிவமைப்பு போன்றவையும் நாடகத்துறையில் முக்கியமான அம்சங்கள். இவற்றின் தொழில்நுட்பம் பற்றியும் டிப்ளமோ படிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். நாடகத்துறையில் ஆர்வமுள்ளவர்கள் தனிப்பட்ட முறையிலோ அல்லது குழுக்களுடன் சேர்ந்தோ பணியாற்றும் வகையில் டிப்ளமோ பாடத்திட்டங்கள் அமைந்துள்ளன.