கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகள் பெருகிவிட்டதால் துறை வழிகாட்டுதல் படிப்புகளுக்கு தனி மரியாதை ஏற்பட்டுள்ளது. கேரியர் கைடன்ஸ் குறித்த அடிப்படை விளக்கங்களில் மாணவர்களுக்கு இந்த டிப்ளமோ பயிற்சியளிக்கிறது. இந்த படிப்பில் கேரியர் கைடன்ஸ் பற்றி பாடத்திட்டங்களுடன் செய்முறைப் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. பலதரப்பட்ட மக்களுடனும், கல்வி நிறுவனங்களுடனும் தொடர்பு கொள்வது உள்ளிட்ட விஷயங்களில் மாணவர்களுக்கு பயிற்சியளிக்கப்படுகிறது.