பிரின்டிங் துறையில் கம்ப்யூட்டர் உதவியுடன் உயர் தரமான பக்கங்களை வடிவமைக்க டெஸ்க் டாப் பப்ளிஷிங் உதவுகிறது. இதன் மூலம் கம்ப்யூட்டர் திரையில் தெரியும் பக்க அமைப்பின் தரம் சிறிதும் மாறாமல் அச்சில் கொண்டு வரமுடியும். இத்துறையில் வேலைக்கு ஆள் தேர்வு செய்யும் போது, டெஸ்க் டாப் பப்ளிஷிங்கில் டிப்ளமோ படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கின்றனர்.