பரதநாட்டியம் இந்தியாவின் பாரம்பரியமான நடனக்கலைகளில் ஒன்று. தென்னிந்தியாவில் முன்பு கோயில்களிலும், பொது அரங்குகளிலும் தான் பரதநாட்டிய நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. இன்று இந்த நடனக்கலை மிகவும் செல்வாக்கு பெற்றுள்ளது. ஆண்கள், பெண்கள் என அனைவரும் இதில் மிகுந்த ஈடுபாடு காட்டுகின்றனர். பரதநாட்டியத்தின் அமைப்பு, நுணுக்கங்கள், அசைவுகள் போன்றவற்றை பற்றி அறிந்து கொள்ளும் விதமாக இந்த டிப்ளமோ படிப்பு அமைந்துள்ளது.