ரசாயன உரத்திற்கு பதிலாக உயிரி உரத்தை பயன்படுத்தும் நோக்கத்தின் முக்கியத்துவம், உயிரி உரம் தயாரிக்கும் முறை போன்ற தகவல்களை இந்த டிப்ளமோ கல்வி வழங்குகிறது. உயிரி உரத்தை தாவர கழிவுகளில் இருந்து தயாரிக்கும் செயல்முறைகளையும் இந்த பாடத்திட்டம் விவரிக்கிறது.
ரசாயன உரம் பயன்படுத்துவதால் மண் வளம் சீரழிந்து, பயிர் வளர்ச்சி பயிர்களின் வளர்ச்சி பாதிப்பதுடன் சுற்றுப்புற சூழ்நிலையும் கெடுகிறது. இதற்கு பதிலாக உயிரி உரத்தை பயன்படுத்துவதால் மண்வளம் மேம்பட்டு பயிர் வகைகள் சிறப்பாக வளர்ச்சியடைகின்றன.