இந்த டிப்ளமோ படிப்பு காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதர்வளுக்கேன்று சிறப்பாக வழங்கப்படுகிறது. காது கேளாதோருக்கு சைகை பயிற்சியும், பேச முடியாதவர்களுக்கு அசைவு மொழி பயிற்சியும், ஒரு விஷயத்தை மற்றவருக்கு சைகை மூலம் புரிய வைத்தல் போன்றவை கற்பிக்கப்படுகிறது.
அலி யாவர் ஜங் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹியரிங் ஹன்டிகேப்டு, மும்பை என்ற கல்வி நிறுவனத்தில் ஒரு வருட மற்றும் இரண்டு வருட படிப்பாக வழங்கப்படுகிறது. இந்த கல்வி நிறுவனம் கொல்கத்தா, நியூ டெல்லி, செகந்திராபாத் மற்றும் புவனேஸ்வர் போன்ற இடங்களில் நிறுவப்பட்டுள்ளது.
தகுதி:
பிளஸ் 2 வில் இயற்பியல், வேதியியல், உயிரியியல், கணித பாடங்களில் ஏதேனும் 3 பாடங்களை எடுத்து படித்தவர்கள் இப்பட்டப்படிப்பில் சேரலாம். குறைந்தபட்சம் 45 சதவித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கல்வி உதவித்தொகை:
இந்த படிப்பில் நல்ல மதிப்பெண் பெற்று அங்கீகாரம் பெற்ற மாணவர்களுக்கு கல்வி துறையின் சார்பில் மாதத்திற்கு தலா ரூ.2000௦௦௦ உதவித்தொகை வழங்கப்படுகிறது.