உலகம் முழுவதும் கடந்த பத்தாண்டுகளில் சுற்றுலாத்துறை அசுர வளர்ச்சியை பெற்றுள்ளது. இதனுடன் சேர்ந்து ஹோட்டல் மேலாண்மைத்துறையும் வளர்ந்துள்ளது. இந்த துறையில் வேலைவாய்ப்புகள் பெருகிவிட்டதால், பல இளைஞர்கள் இத்துறையில் மிகுந்த ஆர்வம் செலுத்துகின்றனர். உலகளவிலான ஹோட்டல நிர்வாகத் துறையில் உள்ள வேலை வாய்ப்புகளுக்கு தேவையான பயிற்சியை இந்த டிப்ளமோ கல்வி மூலம் தர முயற்சிக்கிறார்கள்.