பேக்கரி துறையில் வேலை பார்ப்பது என்பது வெறும் கேக் தயாரிப்பது மட்டுமல்ல. அது ஒரு கலை மற்றும் அறிவியல் என்கின்றனர். இத்துறையில் பணியாற்ற விரும்பும் மாணவர்களுக்கு இந்த கலையை டிப்ளமோ மூலம் சில கல்வி நிறுவனங்கள் கற்றுத் தருகின்றன. இந்த டிப்ளமோ படித்தவர்களுக்கு பேக்கரிகள், உணவுப்பண்ட நிறுவனங்கள், சூப்பர் மார்கெட் மற்றும் பெரிய ஹோட்டல்களின் கிச்சன்களில் வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன.