இதய நோய் தொடர்பான சிகிச்சை, நோய் கண்டுபிடித்தல் போன்ற நுட்பமான தொழில் பயிற்சி இந்த பாடத்திட்டத்தில் வழங்கப்படுகிறது. இத்துறையில் படிக்கும் மாணவர்கள், மருத்துவரின் ஆலோசனைப்படி இதய நோயாளிகளை சோதனை செய்வார்கள். உடலின் உட்புறம், தோல் பகுதியில் துளையிடாமல் இதய சிகிச்சை அளிக்கவும், மருத்துவமனை, சோதனைக் கூடங்களில் பயன்படுத்தப்படும் கருவிகளை கையாளக்கூடிய திறமைகளையும் இந்தக்கல்வி கற்றுத்தருகிறது.