குறிப்பிட்ட பணிகளை முடிப்பதற்காக கம்ப்யூட்டரில் எழுதப்படும் திட்ட நிரல்களான புரோகிராம்களே கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் என்று அழைக்கப்படுகின்றன. தகவல் தொழில்நுட்பத்தில் நவீன வர்த்தக நிர்வாகத்திற்கு தேவையான நெட்வொர்க்கிங், சிஸ்டம் சாப்ட்வேர், அப்ளிகேஷன் சாப்ட்வேர், இன்டர்நெட் போன்ற பிரிவுகளில் இந்த படிப்பு சிறப்பான பயிற்சி அளிக்கிறது. இத்துறையில் படிப்பதால் கம்ப்யூட்டர் உலகில் ஏற்படும் நவீன வளர்ச்சிக்கு ஏற்ப மாணவர்கள் தங்கள் அறிவை வளர்த்துக்கொள்ள முடியும்.