வாகனங்களின் செயல் திறனை பற்றிய டிப்ளோமா படிப்பு மாணவர்களுக்கு உலகளவில் வேலைவாய்ப்பை பெற்று தருகிறது. பாரம்பரியமாக அதிக அளவில் வாகன தயாரிப்பில் ஈடுபட்டு வரும் நிறுவனங்கள் ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் துறையில் ஈடுபட்டு வந்தன. ஆனால் இப்போது வாகனங்களின் உதிரி பாகங்களை தயாரிக்கவும், வடிவமைத்து ஆலோசனை வழங்கவும் தனியார் நிறுவனங்கள் வந்துவிட்டன. இந்த பட்டப்படிப்பு இந்த நிறுவனங்கள் எதிர்பார்க்கும் தொழில் திறன், தொழில்நுட்ப நுணுக்கங்கள் முதலியவற்றில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கிறது.