பல் மருத்துவத்துறையில் இணைந்து பணியாற்ற விரும்புவோருக்கு வரப்பிரசாதமாக இந்த டிப்ளமோ அமைந்துள்ளது. நோயாளியின் பல் சீரமைப்பிற்கு பயன்படும் தொழில் நுட்பக்கருவிகளின் செயல்பாடுகள் பற்றிய அறிவை இந்த டிப்ளமோ மூலம் கற்றுக் கொள்ள முடிகிறது. தனிப்பட்ட நபரிடமோ அல்லது நோய் பாதித்த குழுக்களிடமோ பல் சுகாதாரம் பற்றி அறிவுறுத்துதல், ஆலோசனைகள் வழங்குதல் போன்றவை பல் சுகாதாரப் பணியாளர்களின் பணியாகும். இவர்கள் மருத்துவர்களுடன் இணைந்து பல் தொடர்பான குறைபாடுகளை நீக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். இவர்களுக்கு பயன்படும் விதமாக இந்த டிப்ளமோ அமைந்துள்ளது.