பாஷன் என்பது நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருப்பது. திறமையும், ஆக்கத்திறனும் உள்ள இளைஞர்களுக்கு பேஷன் துறையில் பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன. பணமும், புகழும் சம்பாதிக்க வழியிருப்பதால், பல இளைஞர்கள் பாஷன் துறையில் ஈர்க்கப்படுகின்றனர். இதனால் பாஷன் துறை சார்ந்த படிப்புகளுக்கு நல்ல மதிப்பு ஏற்பட்டுள்ளது. புதிய பாஷன்களை உருவாக்குவது, நிறுவனங்களுக்கு தேவையான ஆடை வடிவமைப்பு, உற்பத்தி போன்ற துறைகளில் மாணவர்களுக்கு பயிற்சியளிக்கும் விதமாக டிப்ளமோ பாடத்திட்டங்கள் அமைந்துள்ளன. பாஷன் தொழில் நுட்பத்துக்கு தேவையான புதுமையான சிந்தனைகளையும், ஐடியாக்களையும் உருவாக்குவதற்கான பயிற்சி டிப்ளமோ மூலம் கிடைக்கிறது.