இன்று உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்துகிற மொழியாக ஆங்கிலம் வளர்ச்சியடைந்தள்ளது. ஐரோப்பிய மொழிக் குடும்பத்தில் உள்ள ஜெர்மானிய மொழிப் பிரிவைச் சேர்ந்த மொழி ஆங்கிலம். அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, அயர்லாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் முதன்மையான மொழியாக விளங்கும் இம்மொழி, உலகம் முழுவதும் 40 கோடி மக்களின் தாய்மொழியாகும். இது தவிர, 70 கோடி மக்கள் ஆங்கிலம் அறிந்தவர்கள். உலகத்திலேயே அதிக அளவு மக்கள் பேசும் மொழியான ஆங்கில மொழியின் அடிப்படை அமைப்பு மற்றும் இலக்கணம் பற்றி இந்த டிப்ளமோ படிப்பில் கற்றுத் தரப்படுகிறது.