கணக்குவழக்கில் ஏற்படும் சிக்கல்களுக்கு கணிதம், வியாபார நுணுக்கம், ஆய்வு முதலியவற்றின் அடிப்படையில் தீர்வு காண, காப்பீட்டு கணக்கியல் படிப்பு கற்றுத்தருகிறது. காப்பீட்டு நிறுவனங்களின் பல பிரிவுகளான காப்பீடு, பொது காப்பீடு, உடல் நல காப்பீடு தொடர்பான கணக்கு வழக்கு சிக்கல்களை தீர்க்க, இந்த படிப்பு உதவுகிறது.இந்த பாடத்திட்டம் கணிதம், புள்ளி விவரம், பொருளாதாரம், நிதி தொடர்பான பாடங்களை ஒருங்கிணைத்து கற்றுத்தரப்படுகிறது.