சிறுநீரகம் செயலிழந்த நோயாளிகளுக்கு இயந்திரம் மூலம் ரத்தத்தை எப்படி சுத்தம் செய்வது என்பது பற்றிய கல்வியை இது வழங்குகிறது. இத்துடன் உடற்கூறு, சுகாதாரம் பற்றியும், டயாலிசிஸ் முறைகள் பற்றியும், நோயாளிகளையும், கருவிகளையும் எப்படி தயார் செய்வது என்பது பற்றியும் கற்றுத்தரப்படுகிறது. இரத்தம் சுத்தம் செய்யக்கூடிய நோயாளிகளுக்கு எந்தெந்த சோதனைகள் மருத்துவ ரீதியாக செய்ய வேண்டும் என்பதையும், உணவூட்ட முறைகள் பற்றியும் அறிய இந்தக்கல்வி உதவுகிறது.