எலக்ட்ரானிக்ஸ் பயன்பாடு மருத்துவமனையில் நோயை கண்டுபிடிக்க உதவும் கருவியில் ஆரம்பித்து தகவல் தொழில் நுட்பம் வரை அனைத்து துறையிலும் பரவியுள்ளது. கம்ப்யூட்டர் தொழில் நுட்பம், தொலைதொடர்பு, கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் போன்றவை வளர்ச்சியின் உச்சத்தில் உள்ளன. எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் படிப்பு மாணவர்களுக்கு சிறப்பான எதிர்காலத்தை வழங்கும்.