மரபியல் மற்றும் மூலக்கூறு உயிரியல் துறைகள், தகவல் தொழில் நுட்பத்தின் பயன்பாட்டினால் வியக்கத்தக்க வளர்ச்சி அடைந்துள்ளன. இதைத் தொடர்ந்து பயோ இன்பர்மேடிக்ஸ் எனப்படும் உயிர் தகவலியல் படிப்பு பெருமதிப்பை பெற்றுள்ளது. இது உயிரியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணிதவியல் போன்ற துறைகளுடன் தொடர்புடையது. தகவல் தொழில் நுட்பத்தின் உதவியுடன் உயிரியல் துறையை மேம்படுத்துவதை இந்த டிப்ளமோ படிப்பு நோக்கமாக கொண்டுள்ளது. உயிரியல் சார்ந்த தகவல்களை தேடிக் கண்டுபிடித்தல், சேமித்தல், பகிர்ந்தளித்தல், பகுத்தல் மற்றும் விளக்கமளித்தல் போன்ற பணிகளுக்கு இதில் பயிற்சியளிக்கப்படுகிறது.