சினிமாவும், டிவியும் இன்று மக்களுடைய வாழ்வில் இன்றியமையாததாகி விட்டது. இந்த துறைகளில் சாதிக்க நல்ல கற்பனைத் திறனும், தொழில் நுட்ப அறிவும் அவசியம். கதையை சினிமா அல்லது டிவி நிகழ்ச்சிக்கு ஏற்றவாறு திரைக்கதையாக்குவது, காட்சிப்படுத்தல், இயக்கம் உள்ளிட்ட தொழில் நுட்பங்களை இந்த டிப்ளமோ படிப்பில் கற்றுத் தருகிறார்கள். சினிமாவில் சாதிக்க விரும்பும் தகுதியும், திறமையும் உள்ள இளைஞர்களுக்கு இந்த டிப்ளமோ படிப்பு கூடுதல் தகுதியாக அமையும்.