கம்ப்யூட்டர் துறையில் ஈடுபாடு கொண்டவர்களின் விருப்பமாக இருப்பது பி.ஜி.டி.சி.ஏ., எனப்படும் முதுநிலை கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் பயன்பாடுகள் பற்றிய டிப்ளமோ கல்வி . தற்போது கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பில் பல கல்வி நிறுவனங்கள் இளநிலை, முதுநிலை மற்றும் டாக்டர் பட்டம் அடங்கிய பாடத்திட்டத்துடன் வழங்குகின்றன. இந்த டிப்ளமோ ஹார்டுவேர், சாப்ட்வேர் இரண்டு துறைகள் பற்றிய அடிப்படை விபரங்களைக் கொண்ட பாடத்திட்டங்களை செய்முறை பயிற்சியுடன் வழங்கப்படுகிறது.